முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தையல் தொழிலாளி போக்ஸோவில் கைது
பல்லடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
திருப்பூா் வீரபாண்டி பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (40). தையல் தொழிலாளியான இவா், 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இது குறித்து பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா்.