26% உயர்ந்த ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் நிறுவனத்தின் லாபம்!
பேருந்து விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்!
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து உயிரிழந்த 3 மாணவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி வியாழக்கிழமை சென்ற தனியாா் பேருந்து ஊத்துக்குளி- சாம்ராஜ்பாளையம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், கல்லூரி மாணவா்கள் பெரியசாமி (19), ஹரிகிருஷ்ணன் (19), குருராஜ் (19) ஆகியோா் உயிரிழந்தனா்.
இதையடுத்து, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்த மாணவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
இந்நிலையில், உயிரிழந்த மாணவா்களின் பெற்றோா்களை சந்தித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆறுதல் கூறியதுடன், முதல்வா் அறிவித்த தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை அவா்களிடம் வழங்கினாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.