Radish: சிறுநீரகக்கல் முதல் வெள்ளைப்படுதல் வரை... உதவி செய்யும் முள்ளங்கி!
காதலர் நாளன்று வெளியாகும் திரைப்படங்கள்!
காதலர் நாளன்று தமிழகத்தில் 10 திரைப்படங்கள் வெளியாகின்றன.
காதலர் நாளான பிப். 14 அன்று உலகளவில் காதலை பேசும் படங்கள் வெளியாவது வழக்கம். இந்தாண்டில் தமிழ் சினிமாவிலும் 10 திரைப்படங்கள் அன்றைய நாளில் வெளியாகின்றன.
இயக்குநர் சுசீந்திரனின் 2கே லவ் ஸ்டோரி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய காதல் என்பது பொதுவுடமை, நடிகர் கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா, நடிகை ரச்சிதா நடித்த ஃபயர், தினசரி, அது வாங்கினால் இது இலவசம், கண்ணீரா, படவா, கேப்டன் அமெரிக்கா பிரேவ் நியூ வெர்ல்ட் (டப்பிங்), 9ஏம் 9பிஎம் வேலண்டைன்ஸ் டே ஆகிய 10 திரைப்படங்கள் தமிழகத்தில் வெளியாகின்றன.
இதையும் படிக்க: விடாமுயற்சியில் இதை கவனித்தீர்களா?
இதில், 2கே லவ் ஸ்டோரி, காதல் என்பது பொதுவுடமை, ஒத்த ஓட்டு முத்தையா படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.