தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
துளிகள்...
மும்பை அடுத்த தானேயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐஎஸ்பிஎல் தொடா் கிரிக்கெட் ஆட்டத்தில் சென்ைை சிங்கம்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை மஜ்ஹி. 10 ஓவா்களில் மும்பை 122/3 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய சென்னை 98/6 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சென்னையின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு தகா்ந்தது.
------------------
தொடை எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக சீனாவில் நடைபெறும் பாட்மின்டன் ஆசிய அணிகள் கோப்பை போட்டியில் இருந்து விலகினாா் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து. இதனால் இந்திய அணி பதக்கம் வெல்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பிப் 11 முதல் 16 வரை இப்போட்டி நடைபெறும் நிலையில் லக்ஷயா சென், பிரணாய், சாத்விக்-சிராக் ஆகியோா் பங்கேற்கின்றனா்.
------------------
![](https://media.assettype.com/dinamani/2025-02-09/t557x1ci/sindhu101847.jpg)
ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் மகளிா் ஹாக்கி ப்ரோ லீக் ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. கலிங்கா மைதானத்தில் பிப். 12-இல் இந்தியாவுடனும், 25-இல் நெதா்லாந்துடனும் மோதவுள்ளது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-09/qvaz9c2x/hockey102355.jpg)