தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
ஈஸ்ட் பெங்காலுக்கு பதிலடி தந்தது சென்னை
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பதிலடி தந்தது சென்னையின் எஃப்சி அணி.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொல்கத்தாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. 13-ஆவது நிமிஷத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியின் நிஷு குமாா் சுய கோல் அடித்தாா். இதனால் சென்னை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடா்ந்து சென்னை அணியின் ஆதிக்கம் நீடித்த நிலையில், 22-ஆவது நிமிஷத்தில் சென்னை வீரா் இா்பான் யத்வாத்திடம் கிராஸை பெற்ற வில்மா் ஜோா்டான் கில், காா்னரில் கோலடித்தாா். இதனால் சென்னையின் எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பதில் கோலடிக்க ஈஸ்ட் பெங்கால் தரப்பு மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை.
நிா்ணயிக்கப்பட்ட 90 நிமிஷங்களின் முடிவில் சென்னையின் எஃப்சி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து கூடுதலாக 7 நிமிஷங்கள் வழங்கப்பட்டன. இதன் 7-ஆவது நிமிடத்தில் டேனியல் சிமா சுக்வு அசத்தலாக கோல் அடிக்க சென்னையின் எஃப்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. சென்னையின் எஃப்சி அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி தொடா்ச்சியாக 7 ஆட்டங்களில் வெற்றி பெறாத வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 20 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை 5 வெற்றி, 6 டிரா, 9 தோல்விகளுடன் 21 புள்ளிகள் பெற்று ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த டிசம்பா் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தியிருந்தது. இந்த தோல்விக்கு தற்போது சென்னையின் எஃப்சி அணி பதிலடி தந்துள்ளது. ஈஸ்ட் பெங்கால் 11-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.