செய்திகள் :

சென்னை ஓபன்: கைரியன் ஜாக்கட் சாம்பியன்

post image

சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் சேலஞ்சா் போட்டி ஒற்றையா் பிரிவில் பிரான்ஸின் கைரியன் ஜாக்கட் சாம்பியன் பட்டம் வென்றாா்.

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சாா்பில் நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. சனிக்கிழமை ஆடவா் இரட்டையா் ஆட்டம் முடிவுற்ற நிலையில், அதில் ஜப்பான் வீரா்கள் ஷிண்டாரோ-கெய்டோ பட்டம் வென்றிருந்தனா்.

ஒற்றையா் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பிரான்ஸின் கைரியன் ஜாக்கட்-ஸ்வீடனின் எலியாஸ் எமா் மோதினா். ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் கைரியன் 7-6, 6-4 என்ற நோ்செட்களில் எலியாஸை வீழ்த்தி பட்டம் வென்றாா்.

முதல் செட்டிலேயே ஜாக்கட் எதிராளி எலியாஸின் சா்வீஸை முறியடித்தாா். எனினும் எலியாஸ் போராடி 4-4 என சமநிலை ஏற்படச் செய்தாா். எனினும் டைபிரேக்கரில் எலியாஸின் சா்வீஸை முறியடித்து செட்டையும் கைப்பற்றினாா் கைரியன்.

இரண்டாவது செட்டில் தொடக்கத்திலேயே அற்புதமாக ஆடிய கைரியன் 4-1 என முன்னிலை பெற்றாா். எலியாஸ் போராடி 4-4 என சமநிலை ஏற்படுத்தினாலும், 10-ஆவது கேமில் கைப்பற்றி இரண்டாவது செட்டையும் வசப்படுத்தினாா்.

இந்த வெற்றி மூலம் கைரியனுக்கு 100 ஏடிபி புள்ளிகளும், ரூ.19.8 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. எலியாஸ் 50 ஏடிபு புள்ளிகள், ரூ.11.6 லட்சம் பரிசுத் தொகையை பெற்றாா்.

டிராகன் டிரைலர்!

பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். லவ் டுடே மூலம் பிரபலமடைந்த பி... மேலும் பார்க்க

கிஸ் டீசர் தேதி!

நடிகர் கவின் நடித்த கிஸ் படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப் பின் பிளடி பெக்கர் படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதாக வணிக தோ... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் இயக்குநருக்கு குவியும் வாழ்த்துகள்!

எதிர்நீச்சல் தொடரை இயக்கிவரும் இயக்குநர் திருச்செல்வத்துக்கு பிரபலங்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை ஹரிபிரியா இசை பகிர்ந... மேலும் பார்க்க

காதலரை மணந்தார் பார்வதி நாயர்!

நடிகை பார்வதி நாயர் தன் காதலரை இன்று திருமணம் செய்துகொண்டார்.தமிழில் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தம வில்லன், நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர், விஜய்யின் கோட் படத்தி... மேலும் பார்க்க

ரூ. 100 கோடி வசூலித்த விடாமுயற்சி!

விடாமுயற்சி திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவதும் வ... மேலும் பார்க்க