39 வயதில் ரூ.1.60 கோடி பென்சனுடன் பணி ஓய்வு பெற்ற இளம் பொறியாளர்..!
பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணியாற்றி வந்த 39 வயதான கணினி தொழில்நுட்பம் சார்ந்த பொறியாளர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பணி ஓய்வுக்குப்பின் வழங்கப்படுகிற வருடாந்திர ஓய்வுத் தொகையோ ரூ. 1.5 கோடியாகும்..!
அமேசான், மைக்ரோசாஃப்ட், ஐபிஎம், இண்டெல் நிறுவனங்களில் பணியாற்றி வந்த கம்ப்யூட்டர் இன்ஜினியரான ஜமால் ராபின்சன் ‘அமேசான்’ நிறுவனத்தில் தனது 16 வயதில் ஜெனிட்டர் பொறுப்பில் இணைந்த ஜமால் ராபின்சன், தான் 45 வயது பூர்த்தியடையும்போது பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டுமென்பதை தன்னுடைய 17-ஆம் வயதிலேயே தீர்மானித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தன் இலக்குகளை 6 ஆண்டுகளுக்கு முன்பே எட்டிவிட்ட காரணத்தால், கடந்தாண்டு தன்னுடைய 39-ஆம் வயதில் பணி ஓய்வை அறிவித்துவிட்டார்.
அதுவும், தான் ஆண்டு வருமானமாக ரூ. 9.63 கோடிக்கும் மேல் பெறும் காலத்தில், வருமானத்தை பொருட்படுத்தாமல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைப்பதே முக்கியமென நினைத்து இந்த முடிவை தைரியமாக எடுத்துள்ளார். அதேவேளையில், பணத்தின் மதிப்பு தனக்கு நன்றாகவே தெரியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
![](https://media.assettype.com/dinamani/2024-06/ce3ae4b2-bc5d-401c-ab4c-1a3a4020c0c6/202401183107059.jpg)
ஒருகாலத்தில், தன்னுடைய நண்பர்கள் சிலர் 200 டாலர் மதிப்பிலான ஷூக்கள் வாங்கி அணியும்போது, தானும் இதுபோல விலையுயர்ந்தவற்றை வாங்கி அணிய எத்தனை மணி நேரம் வேலை பார்க்க வேண்டுமோ? என்று எண்ணி ஆதங்கப்பட்ட நாள்களையும் இந்நேரத்தில் நினைவுகூர்ந்துள்ள ராபின்சன், இவற்றையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு, தான் ஒவ்வொரு முறையும் சம்பள உயர்வு பெறும்போதும் தன்னுடைய சேமிப்பையும் அதற்குத் தகுந்தாற்போல அதிகரித்துக்கொண்டே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், சம்பள உயர்வு கிடைக்கும்போதெல்லாம் தன் சம்பளத் தொகையிலிருந்து சேமிப்புக்கென ஒதுக்கும் தொகையையும் 30 சதவிகிதத்திலிருந்து 50 சத்விகிதம், அதன்பின், 80 சத்விகிதம், பின் சம்பளத்திலிருந்து 90 சதவிகிதம் தொகையை சேமிப்புக்கென ஒதுக்கிவிட்டதால், இப்போது தன்னால் முன்கூட்டியே பணி ஓய்வு பெற முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்தாண்டு பணி ஓய்வு பெற்ற ராபின்சன், வங்கிக்கணக்கில் ரூ. 30.65 கோடிக்கும் மேல் சேமித்து வைத்துள்ளார். தற்போது துபையில் வசித்து வரும் ராபின்சனுக்கு ஓய்வுத் தொகையாக மட்டும் ஆண்டுதோறும் சுமார் ரூ. 1.62 கோடி கிடைக்கிறது.
தன்னுடைய முதலீடுகளை திட்டமிட்டு வகுத்துள்ளதால், பணி ஓய்வுக்குப்பின்னும், ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலர் வரை வருவாய் ஈட்ட முடியுமென நம்பிக்கையுடன் சொல்லி வியக்க வைக்கிறார் இந்த ராபின்சன்..!