விமானப் படையின் மகா கும்பமேளா இது: விமான கண்காட்சியை துவக்கி வைத்த ராஜ்நாத்!
சென்னை ஓபன் டென்னிஸ்: பிரான்ஸ் வீரர் கைரியன் ஜாக்கெட் சாம்பியன்!
சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையா் பிரிவில் பிரான்ஸ் வீரா் கைரியன் ஜாக்கெட் சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் கைரியன் ஜாக்கெட் - சுவீடனின் எலியஸ் மெர் மோதினா்.
விறுவிறுப்பக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 7(7)-6(1), 6-4 என்ற செட்களில் ஆட்டத்தை வென்று சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினா் கைரியன் ஜாக்கெட்.
இதன்மூலம், சர்வதேச டென்னிஸில் மிக உயரிய பட்டமாகக் கருதப்படும் ஏடிபி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாகக் கைப்பற்றி அசத்தியுள்ளார் கைரியன் ஜாக்கெட்.