கடம்பூரில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிப்பு
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் டிரைலர்!
நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ், உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: இளையராஜா பயோபிக் கைவிடப்படவில்லை - தகவல்!
படத்தில் இடம்பெற்ற ’கோல்டன் ஸ்பாரோ’, ’காதல் ஃபெயில்’, ‘ஏடி’, ‘புள்ள’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
இந்த நிலையில், படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். முன்னாள் காதலன், காதலி இணைவார்களா என்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் படத்தின் கதையும் இதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.
சிறப்பு தோற்றத்தில் நடிகர் தனுஷும் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் பிப். 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.