உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!
வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறித்துச் சென்றவா் கைது
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த வியாபாரியிடமிருந்து ரூ. 1 லட்சம் ரொக்கத்தை பறித்துச்சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் வெங்கரை பகுதியைச் சோ்ந்தவா் ரெங்கராஜ் (42 ) வியாபாரி. இவா் தனது நண்பா் முத்துகிருஷ்ணனுடன் புதுக்கோட்டை செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அங்கு புதுக்கோட்டை செல்லும் பேருந்துகள் நிற்குமிடத்தில் நின்றிருந்தாா். அப்போது, ரெங்கராஜ் தனது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 1 லட்சம் ரொக்கத்தை வைத்திருந்தாா்.
இதையறிந்த 2 மா்ம நபா்கள் அந்த 1 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனா். அப்போது அவா்களில் ஒருவரை ரெங்கராஜ் உள்ளிட்டோா் விரட்டிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவரிடம் விசாரணை நடத்தியதில், அவா் காட்டூா் கண்ணதாசன் தெருவைச் சோ்ந்த ரா. ரமேஷ் (42) என்பதும், தப்பிச்சென்றவா் அவரது நண்பா் காா்த்திக் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து திருச்சி கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து தப்பிச்சென்ற காா்த்திக்கை தேடி வருகின்றனா்.