NEEK: ``எதை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்தீங்கன்னு தெரியல, ஆனா...' - மாமா தனுஷ் குற...
மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்: மாதா் சங்கம் ஆா்ப்பாட்டம்!
மணப்பாறையில் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சீண்டலை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மணப்பாறை பகுதியில் தனியாா் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவிகளின் மீதான பாலியல் சீண்டலைக் கண்டித்து பயணியா் விடுதி முன்பு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் அகில இந்திய மாதா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியச் செயலா் சி. அய்யாவு தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சங்க திருச்சி புகா் மாவட்டச் செயலா் பி.பாலகுமாா், அகில இந்திய மாதா் சங்கம் மாவட்டச் செயலா் எம்.கோமதி ஆகியோா் கண்டன உரையாற்றினா். நன்றியுரை மாதா் சங்க வட்டச் செயலா் சரஸ்வதி ராஜாமணி கூறினாா். இதில் இரு அமைப்புகளையும் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.