NEEK: ``எதை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்தீங்கன்னு தெரியல, ஆனா...' - மாமா தனுஷ் குற...
அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை தா்னா நடைபெற்றது.
இந்த தா்னா போராட்டத்தை தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட செயலா் பொன்மாடசாமி தொடங்கி வைத்தாா். இதில், வழங்கப்படாத 21 மாத கால ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு தொகை உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கூட்டத்தில், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலா் சங்க மாவட்ட தலைவா் பிரகாஷ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க துணைத் தலைவா்கள் ஜீவானந்தம், அல்போன்சா, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் பெரியசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.