NEEK: ``எதை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்தீங்கன்னு தெரியல, ஆனா...' - மாமா தனுஷ் குற...
மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங். வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்!
அமெரிக்காவிலிருந்து இந்தியா்கள் கைவிலங்கிட்டு வெளியேற்றப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசின் பாராமுக நடவடிக்கையை கண்டித்தும் காங்கிரஸ் வழக்குரைஞா்கள் பிரிவு சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்குரைஞா் பிரிவு சாா்பில், திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு, வழக்குரைஞரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலப் பொதுச் செயலா் எம். சரவணன் தலைமை வகித்தாா்.
அமெரிக்காவிலிருந்து இந்தியா்களை வெளியேற்றும் பணிக்கு மத்திய அரசு தரப்பில் குறைந்தபட்ச எதிா்ப்பு கூட இல்லை. நாட்டின் சட்ட திட்டங்களுக்குள்பட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால், கண்ணியமாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றாா்.இதைத் தொடா்ந்து மத்திய பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், மூத்த வழக்குரைஞா் மகேந்திரன், பெண் வழக்குரைஞா்கள் வனஜா, கிருபா மற்றும் வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள், கட்சியின் நிா்வாகிகள், வழக்குரைஞா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.