நமக்குள்ளே... 30, 40, 50 வயதுகளில் வீட்டுக்குள் காதல்... இருக்கா, இல்லையா?
கூலி படப்பிடிப்பு அப்டேட்!
கூலி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்ததும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தின் பாங்காக்கில் நடத்தி வந்தனர்.
இதையும் படிக்க: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் டிரைலர்!
அங்கு, முக்கியமான சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தற்போது மீண்டும் சென்னையில் கூலி படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். விமான நிலையத்தில் நடைபெற்று வரும் படத்தின் படப்பிடிப்பு ஓரிரு நாள்களில் முடிந்ததும் படக்குழு ஹைதராபாத் செல்ல முடிவு செய்துள்ளனராம். மார்ச் மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் எனத் தெரிகிறது.