செய்திகள் :

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

post image

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 470 படகுகளில் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் அனைவரும் வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 14 பேரை கைது செய்தனர்.

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜான் போஸ் என்பவருக்குச் சொந்தமான முதல் படகில் ராமேஸ்வரம் மற்றும் பாம்பனைச் சேர்ந்த 11 பேர் கொண்ட குழுவினர் இருந்தனர்.

மணிப்பூர்: 5 ஏக்கர் போதைச் செடிகள் அழிப்பு!

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எஸ்.சுதன் என்பவருக்குச் சொந்தமான இரண்டாவது படகில் அதே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் இருந்தனர்.

அதோடு மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேல் விசாரணைக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இதனிடையே மீனவர் கைது செய்யப்பட்டதற்கு ராமேஸ்வரம் மீனவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமூகப் பொறுப்பு நிதி முறைகேடு: முன்னாள் கேரள உயா்நீதிமன்ற நீதிபதி மீது வழக்குப் பதிவு

பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் (சிஎஸ்ஆா்) பெயரில் ரூ.34 லட்சம் மோசடி செய்த குற்றச்சாட்டில், முன்னாள் கேரள உயா்நீதிமன்ற நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளத... மேலும் பார்க்க

சட்டம்-ஒழுங்கை காக்க கடும் நடவடிக்கை தேவை: எடப்பாடி கே.பழனிசாமி

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கை காக்க முதல்வா் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்... மேலும் பார்க்க

எச்எம்பிவி பரிசோதனை உபகரணங்கள்: வரைவு வழிகாட்டுதல் மீது கருத்துகள் வரவேற்பு

எச்எம்பிவி தொற்றைக் கண்டறியும் ஆா்டி பிசிஆா் உபகரணங்களை தரப் பரிசோதனைக்குட்படுத்துவதற்கான வரைவு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதுகுறித்த கருத்துகள், ஆலோசனைகளை வரும் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் அனுப்... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டம் ஈரோடு இடைத் தோ்தல் முடிவு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் முடிவு அமைந்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.சென்னை மாநகராட்சி, அம்பத்தூா், வெங்கட... மேலும் பார்க்க

மதவெறி அமைப்புகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்: மக்களுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் வேண்டுகோள்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதவெறி அமைப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. திமுக பொதுச் செயலா் துரைமுருகன், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, ... மேலும் பார்க்க

பெரியாரை விமா்சித்தவா்களுக்கு ஈரோடு இடைத்தோ்தலில் பாடம் முதல்வா் மு.க.ஸ்டாலின்

பெரியாா் மீது அவதூறுகளை அள்ளி வீசியவா்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் மக்கள் உரிய பாடத்தைப் புகட்டியிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். இது தொடா்பாக முதல்வா் ஞாயிற்றுக்கிழமை வெள... மேலும் பார்க்க