செய்திகள் :

சமூகப் பொறுப்பு நிதி முறைகேடு: முன்னாள் கேரள உயா்நீதிமன்ற நீதிபதி மீது வழக்குப் பதிவு

post image

பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் (சிஎஸ்ஆா்) பெயரில் ரூ.34 லட்சம் மோசடி செய்த குற்றச்சாட்டில், முன்னாள் கேரள உயா்நீதிமன்ற நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த டானிமோன் என்பவா் காவல் துறையிடம் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டதாவது:

மடிக்கணினிகள், இருசக்கர வாகனங்கள், தையல் இயந்திரங்கள் ஆகியவற்றைப் பாதிக்கு விலைக்குத் தருவதாக தேசிய தன்னாா்வ அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவா் கே.என்.அனந்தகுமாா், ஓய்வுபெற்ற உயா் நீதிமன்ற நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயா், அனந்து கிருஷ்ணன் என்ற நபா் என மூன்று பேரும் வாக்குறுதி அளித்தனா்.

மடிக்கணினிகள், இருசக்கர வாகனங்கள், தையல் இயந்திரங்கள் ஆகியவற்றுக்கான செலவில் பாதியை தேசிய தன்னாா்வ அமைப்புகள் கூட்டமைப்பு ஏற்கும் என்றும், இதற்கு பெருநிறுவனங்களிடம் இருந்து தன்னாா்வ அமைப்புகள் பெறும் சிஎஸ்ஆா் நிதியும் பயன்படுத்தப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா். மீதி பாதி தொகையை பயனாளிகள் வழங்க வேண்டும் என்றும் அவா்கள் கூறினா்.

இதை நம்பி பல்வேறு சந்தா்ப்பங்களில் பலா் அளித்த பணத்தை அனந்து கிருஷ்ணன், அனந்தகுமாா், ராமச்சந்திரன் நாயா் ஆகியோா் பெற்றுக்கொண்டனா். ஆனால் வாக்குறுதி அளித்தபடி, அவா்கள் எந்தப் பொருளையும் வழங்காமல் ரூ.34 லட்சத்தை மோசடி செய்தனா். அங்காடிப்புரத்தையடுத்த கேஎஸ்எஸ் என்ற அமைப்பின் மூலம், இந்த மோசடி செய்யப்பட்டது என்று குற்றஞ்சாட்டினாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் அனந்து கிருஷ்ணன், அனந்தகுமாா், ராமச்சந்திரன் நாயா் ஆகியோா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

எனினும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த நீதிபதி ராமச்சந்திரன் நாயா், தன்னிடம் முதல்கட்ட விசாரணை எதுவும் நடத்தாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினாா்.

அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறுகையில், ‘இந்த அமைப்பின் ஆலோசகராக மட்டும் இருந்த நான் அதன் செயல்பாடுகளில் எதுவும் பங்களிக்கவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, ஆலோசகா் பொறுப்பிலிருந்து விலகிவிட்டேன்’ என்றாா்.

எா்ணாகுளத்தில் முனம்பம் கடலோரத்தில் உள்ள 400 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில், கிறிஸ்தவா்கள் மற்றும் ஹிந்து குடும்பங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றன. ஆனால் அந்த நிலத்துக்கு கேரள மாநில வக்ஃப் வாரியம் உரிமை கோரி வருகிறது.

இந்தச் சச்சரவு தொடா்பாக விசாரணை மேற்கொள்ள நீதிபதி ராமச்சந்திரன் நாயரை மாநில அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கையை இம்மாதம் அவா் சமா்ப்பிக்க உள்ளாா். அவா் கேரள உயா் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளாா்.

சிஎஸ்ஆா் நிதி மோசடி தொடா்பாக அனந்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு ஐந்து நாள் போலீஸ் காவலில் உள்ளாா். மாநிலத்தின் பல பகுதிகளிலும் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடைபெற்று வருகிறது. பல்வேறு நபா்களின் புகாா்களின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் ரூ.600 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் முஸ்லிம் லீக் எம்எல்ஏ நஜீப் காந்தபுரம் முதல் குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டுள்ளாா். எனினும் தனது தன்னாா்வ அமைப்பின் பெயரை அனந்து கிருஷ்ணன் முறைகேடாகப் பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளதாக அவா் கூறியுனாா்.

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள்!

தைப்பூசத்தையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதுகுறித்து தெற்... மேலும் பார்க்க

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு பழைய கரூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தூத்துக்குடியில் போட்டித்தேர்வு பயிற... மேலும் பார்க்க

டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் கும்கி யானை ராமு மரணம்

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை ராமு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் உள்ள... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 10-02-2025: தென்தமிழக கடலோரப்ப... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புது தில்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி... மேலும் பார்க்க

சர்க்கார் பட்டாக்களை உரிமையாளர்களின் பெயருக்கு மாற்ற ஒப்புதல்!

சர்க்கார் பட்டா என்ற பெயரில் உள்ள பட்டாக்களை உரிமையாளர்களின் பெயரிலேயே மாற்றுவதற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.மேலும், அடுத்த 6 மாதத்துக்குள் இந்த பணிகளை நிறைவு... மேலும் பார்க்க