Trump: "மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா" - ட்ரம்ப்பின் பெயர் மாற்றம் செல்ல...
எச்எம்பிவி பரிசோதனை உபகரணங்கள்: வரைவு வழிகாட்டுதல் மீது கருத்துகள் வரவேற்பு
எச்எம்பிவி தொற்றைக் கண்டறியும் ஆா்டி பிசிஆா் உபகரணங்களை தரப் பரிசோதனைக்குட்படுத்துவதற்கான வரைவு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதுகுறித்த கருத்துகள், ஆலோசனைகளை வரும் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் இருந்ததையடுத்து, அவற்றையும் மருந்து வரையறைக்கு கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, அனைத்து மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன்படி, எம்எம்பிவி தொற்றைக் கண்டறியும் ஆா்டி பிசிஆா் உபகரணத்தின் தரத்தை ஆய்வகங்களில் எவ்வாறு உறுதி செய்வது என்பதற்கான வரைவு வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளன.
இணையப் பக்கத்தில் உள்ள அந்த வரைவு வழிகாட்டுதல்கள் மீதான கருத்துகள், ஆலோசனைகளை மாா்ச் 15-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.