Radish: சிறுநீரகக்கல் முதல் வெள்ளைப்படுதல் வரை... உதவி செய்யும் முள்ளங்கி!
பெருமாநல்லூர் வந்து செல்லாத தனியார் பேருந்துகள் சிறைப்பிடிப்பு!
அவிநாசி: பெருமாநல்லூர் வந்து செல்லாத பேருந்துகளை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சிறைப்பிடித்தனர்.
சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து செல்லும் பெரும்பாலான தனியார், அரசுப் பேருந்துகள் பெருமாநல்லூர் பகுதிக்குள் வந்து செல்லாததால் பொதுமக்கள், வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.
இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என சமூகஆர்வலர்கள், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், பெருமாநல்லூர் புதிய திருப்பூர் அருகே தனியார் பேருந்துகளை ஞாயிற்றுக்கிழமை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... முதுகெலும்பும் முட்டுக்கொடுப்புகளும்!
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருமாநல்லூர் போலீஸார் பெருமாநல்லூர் வந்து செல்லாத தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.
மேலும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி பேருந்துகளை அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.