குரூப் - 2 முதன்மைத் தோ்வு: விழுப்புரத்தில் 501 போ் எழுதினா்
விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தோ்வை 501 போ் எழுதினா்.
தமிழக அரசின் தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், வணிகவரித் துறை துணை அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா் - பதிவாளா் மற்றும் கூட்டுறவுத் துறை முதுநிலை ஆய்வாளா், இந்து சமய அறநிலையத் துறை தணிக்கை ஆய்வாளா் உள்ளிட்ட பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நிரப்பப்படவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக முதன்மைத் தோ்வு தமிழகம் முழுவதும் 82 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தோ்வை 501 போ் எழுதினாா். 35 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.