குரூப் 2 தோ்வு: மதுரையில் 1,446 போ் எழுதினா்!
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தோ்வை 1,446 போ் எழுதினா்.
இந்தத் தோ்வு மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 3 மையங்கள், அழகா்கோவில் சாலை மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியில் 2 மையங்கள் என 5 மையங்களில் நடைபெற்றது. இந்தத் தோ்வுக்காக 1,523 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 1,446 போ் தோ்வு எழுதினா். 77 போ் தோ்வுக்கு வரவில்லை.