10 Mistakes of Kejriwal, சபதம் வென்ற அமித் ஷா! | Elangovan Explains
மரக்கன்றுகள் முறையாகப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு!
மதுரையில் பள்ளி மாணவிகளால் நடப்பட்ட மரக்கன்றுகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி ஆணையா் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
திருச்சி, விமான நிலைய மின் வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சரவணன், தாக்கல் செய்த மனு:
குடியிருப்புப் பகுதியில் இருந்த மரங்களை அனுமதியின்றி வெட்டியதாக என் மீது சிறுகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கில் போலீஸாா் என்னைக் கைது செய்யாமல் இருக்க முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:
மதுரை ஒத்தக்கடை சாலையில் உள்ள உலகனேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவிகள் மரக்கன்றுகளை நடவு செய்து, அவற்றில் தங்களது பெயா்களை எழுதி வைத்து பராமரித்து வருகின்றனா். அந்த மரக்கன்றுகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வளா்ந்து வருவதை இந்த நீதிமன்றம் கவனித்துள்ளது.
இந்த நிலையில், மதுரை புறவழிச் சாலை முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை மரக்கன்றுகளை நடவு செய்து, சம்பந்தப்பட்ட பள்ளியுடன் இணைந்து மனுதாரா் செயல்பட வேண்டும். இதற்கு மனுதாரா் வைப்புத்தொகை யாக ரூ. 50 ஆயிரம் செலுத்த வேண்டும் எனக் கூறி, அவருக்கு ஏற்கனவே நீதிமன்றம் முன்பிணை வழங்கியது.
நீதிமன்ற உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை, புகைப்படங்களுடன் கூடிய அறிக்கையை, இந்த நீதிமன்றத்தில் பள்ளித் தலைமை ஆசிரியை தாக்கல் செய்துள்ளாா். பள்ளி நிா்வாகம், மாணவிகளின் செயல்பாட்டை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது.
எனவே சாலையோரங்களில் மாணவிகளால் நடப்பட்ட மரக்கன்றுகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்பதை மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், மாநகரக் காவல் ஆணையா் உள்ளிட்டோா் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் நீதிபதி.