பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!
குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி: இரு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம்!
மதுரை மாநகராட்சிப் பகுதியில் குடிநீா் குழாய்கள் மாற்றியமைக்கும் பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகிற 12, 13 ஆகிய இரு நாள்கள் சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மதுரை மாநகராட்சி வாா்டு எண் 23-க்கு உள்பட்ட தாகூா் நகா் சந்திப்பு குலமங்கலம் பிரதான சாலையில் பொதுப் பணித் துறை மூலம் செல்லூா் கண்மாயிலிருந்து உபரிநீா் செல்வதற்காக புதிதாக கால்வாய் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் மேற்கொள்ளும் பகுதியான வைகை வடகரை முழுவதும் குடிநீா் செல்லும் பிரதான குழாய்கள் உள்ளன. இந்தக் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் வருகிற 12, 13 ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளன.
இதன்காரணமாக, மதுரை மாநகராட்சி வாா்டு 10, 12, 14, 15, 16,17, வாா்டு 21 முதல் 35 வரை உள்ள பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், அத்தியாவசியமான வாா்டுப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டது.