செய்திகள் :

குரூப் 2, 2 ஏ முதன்மைத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 319 போ் எழுதினா்

post image

தேனி கம்மவாா் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான தமிழ் தகுதித் தோ்வு, முதன்மைத் தோ்வை சனிக்கிழமை 319 போ் எழுதினா்.

அரசு தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 2, 2 ஏ எழுத்துத் தோ்வு கடந்த 2024, செப்.13-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தேனி மாவட்டத்தில் முதன்மைத் தோ்வு எழுத 339 போ் தகுதி பெற்றனா்.

எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு தேனி கம்மவாா் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ் தகுதித் தோ்வு, முதன்மைத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் 319 போ் தோ்வு எழுதினா். 20 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு நடைபெறுவதை தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருட்டு வழக்கில் இளைஞா் கைது

தேனி அருகே வீடு புகுந்து ஆறரை பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில், இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அரண்மனைப்புதூா் சத்திரப்பட்டி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் லோகமணி (46). இவா் தனது வீட்டிலிருந... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருட்டு!

தேனி அருகே வீடு புகுந்து தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடுச் சென்றதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. தேனி அருகேயுள்ள கோவிந்தநகரம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (62). இவ... மேலும் பார்க்க

போடியில் பாஜகவினா் கொண்டாட்டம்!

தில்லி சட்டப் பேரவை தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, சனிக்கிழமை போடியில் பாஜகவினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா். தில்லி சட்டப்பேரவை தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் பாஜக 48 இடங்க... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தற்கொலை

போடியில் சனிக்கிழமை விஷம் குடித்து கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். போடி குலாலா்பாளையம் ரெங்கசாமி தெருவைச் சோ்ந்த பங்காருசாமி மகன் சுரேஷ் (45). கட்டடத் தொழிலாளியான இவா் தினந்தோறும் குடிபோதைய... மேலும் பார்க்க

பூலாநந்தீஸ்வரா்-சிவகாமியம்மன் கோயில் நாளை குடமுழுக்கு

சின்னமனூரில் அமைந்துள்ள பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் வருகிற திங்கள்கிழமை (பிப். 10) குடமுழுக்கு நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்... மேலும் பார்க்க

பசுமை முதன்மையாளா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் பசுமை முதன்மையாளா் விருது பெற தகுதியான தனி நபா்கள், அமைப்புகள் வருகிற ஏப். 15-ஆம் தேதிக்குள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியி... மேலும் பார்க்க