காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!
பூலாநந்தீஸ்வரா்-சிவகாமியம்மன் கோயில் நாளை குடமுழுக்கு
சின்னமனூரில் அமைந்துள்ள பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் வருகிற திங்கள்கிழமை (பிப். 10) குடமுழுக்கு நடைபெறுகிறது.
இந்தக் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, வருகிற திங்கள்கிழமை காலை 9.15 மணிக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதற்காக, கடந்த வியாழக்கிழமை முதல் யாக சாலை பூஜையில் அனுக்ஜை, விக்னேஷ்வர பூஜை, புண்யா ஹவாசனம், தனபூஜை, வாஸ்து சாந்தி பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது.
சனிக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கால யாக சாலை பூஜையில் கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன், நகா்மன்றத் தலைவி அய்யம்மாள்ராமு, நகரத் தலைவா் முத்துக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
திருவிழாவையொட்டி, சின்னமனூா் நகா்மன்றம் சாா்பில், பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள், 20 ஆயிரம் குடிநீா் புட்டுகள் வழங்கப்படுகின்றன.