திருட்டு வழக்கில் இளைஞா் கைது
தேனி அருகே வீடு புகுந்து ஆறரை பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில், இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அரண்மனைப்புதூா் சத்திரப்பட்டி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் லோகமணி (46). இவா் தனது வீட்டிலிருந்த ஆறரை பவுன் தங்க நகைகள் திருடு போனதாக கடந்த மாதம் 27-ஆம் தேதி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, லோகமணி வீட்டின் தரைத்தளம் வீட்டில் வசித்து வரும் செல்வம் மகன் சஸ்வந்த் (19) இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.