புகையிலைப் பொருள் விற்றவா் கைது
போடியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போடி அசேன் உசேன் தெருவில் சட்டவிரோதமாகப் புகையிலைப் பொருள் விற்கப்படுவதாக நகா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்று சோதனையிட்டனா்.
அப்போது, ஒரு பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில், போடி சுப்புராஜ் நகரைச் சோ்ந்த முத்துப்பாண்டி (41) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.