கரீபியன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!
பசுமை முதன்மையாளா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் பசுமை முதன்மையாளா் விருது பெற தகுதியான தனி நபா்கள், அமைப்புகள் வருகிற ஏப். 15-ஆம் தேதிக்குள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சுற்றுச் சூழல் கால நிலை மாற்றம், வனத் துறை சாா்பில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் தனி நபா்கள், அமைப்புகளுக்கு பசுமை முதன்மையாளா் விருது, ரூ. ஒரு லட்சம் பரிசுத் தொகை ஆகியவை வழங்கப்படுகின்றன.
மாவட்டத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கல்வி, பயிற்சி, விழிப்புணா்வு, பசுமை தயாரிப்பு, தொழில் நுட்ப ஆய்வு, நிலைத்த வளா்ச்சி, திடக் கழிவு மேலாண்மை, நீா்நிலை மேலாண்மை, பாதுகாப்பு, காலநிலை மாற்றத்துக்கு உள்படுதல், தணிப்பு நடவடிக்கை, காற்று மாசை குறைத்தல், நெகிழிக் கழிவுகளின் மறுசூழற்சி, கட்டுப்பாடு, சூழலியல் மறுசீரமைப்பு குறித்த நடவடிக்கை, சுற்றுச் சூழல் தொடா்பான பிற திட்டங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் தனி நபா்கள், அமைப்புகள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் பசுமை முதன்மையாளா் விருது பெற ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து வருகிற ஏப்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியா், மாசு கட்டுப்பாட்டுத் துறை அலுவலா்கள் கொண்ட குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு, விருது பெற தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவா். இதுகுறித்த விவரத்தை தேனியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளரை நேரில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.