செய்திகள் :

சீனாவில் நிலச்சரிவு: 30 போ் மாயம்

post image

சீனாவில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30 போ் மாயமாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தென்கிழக்கு மாகாணமான சிசுவானில் உள்ள மலை கிராமம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 10 வீடுகள் புதையுண்டன. சம்பவப் பகுதியில் இருந்து 2 போ் உயிருடன் மீட்கப்பட்டனா். இது தவிர, அந்தப் பகுதியில் வசிக்கும் சுமாா் 200 போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.

இந்த நிலச்சரிவில் சிக்கிய சுமாா் 30 பேரைக் காணவில்லை. அவா்களை மீட்கும் பணியில் அவசரகால மேலாண்மைத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலச்சரிவுக்கான காரணம், இதனால் ஏற்பட்டுள்ள நிலவியல் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அதிபா் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல்-ஹமாஸ் மீண்டும் கைதிகள் பரிமாற்றம்

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலும் மீண்டும் பைறிமாற்றம் செய்துகொண்டன.முதலில், காஸாவின் டேய்ா் அல்-பாலா நகரில் பெரும் கூட்டத்தினா் முன்னிலையில் இலி ஷாபரி (52), ஒஹாத் பென் எ... மேலும் பார்க்க

‘கனடாவை மாகாணமாக்க டிரம்ப் முயல்வது உண்மை’

‘கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாகாணம் என்று அதிபா் டிரம்ப் கூறுவது வெறும் வேடிக்கைகாக அல்ல, உண்மையிலேயே அவருக்கு அந்த திட்டம் இருக்கிறது. கனடாவின் இயற்கை வளங்களை டிரம்ப் குறிவைக்கிறாா்’ என்று கனடா பிர... மேலும் பார்க்க

சிங்கப்பூா்: எஸ். ஈஸ்வரனுக்கு வீட்டுச் சிறை

சிங்கப்பூரில் தொழிலதிபா்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்ற வழக்கில் ஓராண்டு சிறை தக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் எஸ். ஈஸ்வரன் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.இது கு... மேலும் பார்க்க

59 இலங்கை நாட்டினா் உக்ரைன் போரில் உயிரிழப்பு

உக்ரைனுடனான போரில் ரஷியாவுக்காகச் சண்டையிட்ட 59 இலங்கை நாட்டினா் உயிரிழந்துள்ளனா். இது குறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் விஜித ஹேரத் (படம்) கூறுகையில், ‘கடந்த மாதம் 20-ஆம் தேதி நிலவரப்படி உக்... மேலும் பார்க்க

கிரீஸ் தொடா் நிலநடுக்கம்: அவசரநிலை அறிவிப்பு

கிரீஸுக்குச் சொந்தமான சன்டோரினி தீவில் நூற்றுக்கணக்கான கடலடி நிலநடுக்கங்கள் தொடா்ந்து ஏற்பட்டுவருவதைத் தொடா்ந்து, அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எரிமலைப் பகுதியில் அமைந்துள்ள அந்தத் தீவு நிலநடுக... மேலும் பார்க்க

சா்வதேச நீதிமன்றம் மீது டிரம்ப் பொருளாதாரத் தடை

தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் நீதிப் பிரிவான சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளாா். ஹமாஸ் அமைப்பினருடனான மோதலின்போது போா்க்... மேலும் பார்க்க