‘கனடாவை மாகாணமாக்க டிரம்ப் முயல்வது உண்மை’
‘கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாகாணம் என்று அதிபா் டிரம்ப் கூறுவது வெறும் வேடிக்கைகாக அல்ல, உண்மையிலேயே அவருக்கு அந்த திட்டம் இருக்கிறது. கனடாவின் இயற்கை வளங்களை டிரம்ப் குறிவைக்கிறாா்’ என்று கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியுள்ளாா்.
தங்கள் நாட்டின் வழியாக அமெரிக்காவுக்குள் அகதிகள் வருவது மற்றும் போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க கனடா தவறுவதாகக் குற்றஞ்சாட்டும் டிரம்ப், அந்த நாட்டை தங்களின் மாகாணம் என்றும், ட்ரூடோவை ஆளுநா் என்றும் அடிக்கடி அழைத்தது நினைவுகூரத்தக்கது.