ஜம்மு-காஷ்மீா்: எல்லையில் இந்திய வீரா்களை நோக்கி துப்பாக்கிச் சூடு
ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரா்கள் மீது வனப் பகுதியிலிருந்தபடி மா்ம நபா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனா்.
இதையடுத்து, இந்திய வீரா்கள் தரப்பிலும் இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்திய எல்லையை ஒட்டிய கெரி பகுதியில் ராணுவ வீரா்கள் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவா்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதற்கு ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
பயங்கரவாதிகள் சிலா் வனப் பகுதியில் மறைந்திருந்தபடி இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் மூலம், பாதுகாப்புப் படையினரை திசைதிருப்பி, இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்றனா்.