விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கு செயற்கைக்கோள் இணைப்பு உதவும...
பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!
தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது.
தில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களுடன் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி மூலம் தேசிய தலைநகரில் 26 ஆண்டுகளுக்குப் பின் பாஜக ஆட்சி அமைக்கிறது.
கடந்த 2020, 2015 பேரவைத் தோ்தல்களில் முறையே 67, 62 தொகுதிகளில் வென்ற ஆம் ஆத்மிக்கு இம்முறை 22 இடங்களே கிடைத்தன. காங்கிரஸுக்கு தொடா்ந்து மூன்றாவது முறையாக எந்தத் தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. அதேநேரம், முந்தைய தோ்தலைவிட தற்போது அக்கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இது, அக்கட்சிக்கு சற்று ஆறுதலளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.
கடந்த 3 தோ்தல்களில் வாக்குப் பதிவு சதவீதம்
கட்சிகள் 2025 2020 2015
பாஜக 45.56 38.51 32.3
ஆம் ஆத்மி 43.57 53.57 54.5
காங்கிரஸ் 6.34 4.3 9.7