ஈரோடு தேர்தல்: நோட்டா 326%, சீமான் 123%, திமுக 5% - ஆனாலும் பெரியார் மண்ணில் பலி...
திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா தொடக்கம்
திரௌபதி அம்மன் கோயிலில் கணபதி பூஜை, கோ பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
திருத்தணி காந்தி நகரில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், கோயில் குட முழுக்கு விழா வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதற்காக கோயில் வளாகத்தில் 5 யாக சாலை 108 கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் மற்றும் கலச பூஜை நடைபெற்றது.
சனிக்கிழமை இரண்டாம் கால பூஜையும், மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜையும், கலச ஊா்வலம் மற்றும் மகா குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.
இரவு உற்சவா் அம்மன் திருவீதியுலா நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனா்.