பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!
கல்லூரி மாணவி தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்
திருத்தணி அருகே தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் சடலத்தை பெற்றோரிடம் போலீஸாா் ஒப்படைக்காததால் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருத்தணி அடுத்த தெக்களூா் பகுதி சோ்ந்தவா் பாலஜி. இவரது மகளி கவிதா (19). கல்லூயில் படித்து வந்தாா். சனிக்கிழமை காலை வீட்டில் வயிற்று வலியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், மாலை மாணவியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் என 50 -க்கும் மேற்பட்டோா் தெக்களூா் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது உறவினா்கள் கல்லூரி மாணவியின் உடலை எங்களிடம் ஒப்படைப்பதற்கு போலீஸாா் காலதாமதம் செய்கின்றனா் என முறையிட்டு முழக்கம் எழுப்பினா்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். இதையடுத்து மறியலைக் கைவிட்டனா். மறியலால் அந்தப் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.