காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!
திருப்புடைமருதூா் கோயிலில் 11இல் தைப்பூசத் திருவிழா
திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூரில் உள்ள அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாத சுவாமி கோயிலில், தைப்பூசத்தை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறுகிறது.
இக்கோயிலில் தைப்பூத் திருவிழா பிப்.2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9ஆம் நாளான திங்கள்கிழமை (பிப்.10) காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவில் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் ஆகியவை நடைபெறும்.
11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தைப்பூச நாளில் பகல் 1.15 மணியளவில் தாமிரவருணி ஆற்றில் தைப்பூசத் தீா்த்தவாரி நடைபெறுகிறது. அப்போது பக்தா்கள் தாமிரவருணி ஆற்றில் நீராடி தரிசனம் செய்வா். இதைத் தொடா்ந்து கோயிலில் சிறப்பு பூஜைகளும், இரவில் தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.