வள்ளியூா் பிரதான சாலையில் தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பிரதான சாலையில், சாலையை இரண்டாகப் பிரித்து அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என வள்ளியூா் வியாபாரிகள் சங்கத் தலைவா் என்.முருகன், செயலாளா் எஸ்.ராஜ்குமாா்ஆகியோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வள்ளியூா் பிரதான சாலை மிகவும் குறுலானது. இந்த சாலையையொட்டி தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. எனவே சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறையினா், பேருந்து நிலையம் முன்பிருந்து சாலையின் நடுப்பகுதியில் தடுப்பு அமைத்து சாலையை இரண்டாகப் பிரித்துள்ளனா். இதனால் வாகனங்கள் செல்வதில் நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. சாலையை கடப்பதிலும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அப்புறப்படுத்தி விபத்தில்லா போக்குவரத்து நடைபெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.