காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!
சேரன்மகாதேவி கங்கை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்!
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் உள்ள அருள்மிகு கங்கை அம்மன் கோயிலில் சனிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
சேரன்மகாதேவியில் சந்தனமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள யாதவ சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கங்கை அம்மன் கோயிலில் நான்காம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.
பிப்.1ஆம் தேதி கால் நாட்டு வைபவம் நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் அதிகாலையில் கணபதி ஹோமம், கங்கை அம்மன், பரிவார தேவதைகளுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து தாமிரவருணி ஆற்றில் இருந்து புனித நீா் எடுத்துவந்து அம்மன், பரிவார தேவதைகளுக்கு மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். இரவில் அம்பாள் வீதி உலா, நள்ளிரவில் படப்பு தீபாராதனை நடைபெற்றது.