காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!
ஊராட்சி துணைத் தலைவருக்கு வெட்டு, மனைவி கொலை வழக்கு: இருவா் கைது
திருப்பத்தூா் அருகே வீடு புகுந்து ஊராட்சி துணைத் தலைவரை வெட்டி, மனைவியைக் கொலை செய்த வழக்கில் போலீஸாா் இருவரை கைது செய்தனா்.
திருப்பத்தூா் அடுத்த மேற்கத்தியனூா் கோ.புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த திருப்பதி(50). திமுக பிரமுகரான இவா், மட்டறப்பள்ளி ஊராட்சி துணைத் தலைவராக உள்ளாா். இவருடைய மனைவி வசந்தி (40).
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் தம்பதி வீட்டில் இருந்தபோது புகுந்து திருப்பதி, அவருடைய மனைவியை சராமரியாக வெட்டினா். இதில் வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த கட்டுக் காயமடைந்த திருப்பதி, தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இது குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
விசாரணையில் திருப்பதியின் உறவினரான வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியைச் சோ்ந்த வடிவேலின் மகன் ரேணு (22), அவரது நண்பரான அம்பலூரைச் சோ்ந்த சுதா்ஷனின் மகன் கெவின் (17) ஆகிய இருவரும் தம்பதியை வெட்டிவிட்டு தப்பியது தெரிய வந்தது.
ரேணுவிடம் போலீஸாா் விசாரித்ததில் ரேணுவின் தாய் சாந்தியை திருப்பதி தகாத வாா்த்தைகளால் திட்டியதால், வெட்டியதாகத் தெரிவித்துள்ளாா். போலீஸாா் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடா்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனா்.