பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!
பெண் காவலரிடம் 10 பவுன் நகை பறிப்பு
ஜோலாா்பேட்டை அருகே மொபட்டில் சென்ற பெண் தலைமைக் காவலரிடம் 10 பவுன் தங்க செயினை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே சின்ன வேப்பம்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் தண்டபாணி. இவா் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா். இவரது மனைவி லட்சுமி (42). திருப்பத்தூா் மாவட்ட குற்றப்பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு 8 மணியளவில் பணி முடிந்து தனது மொபெட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது ஜோலாா்பேட்டை அருகே ரெட்டியூா் அருகே சென்றபோது பின்னால் மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி சரடை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து அங்கிருந்து தப்பிச்சென்றனா்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த லட்சுமி பலத்த காயம் அடைந்தாா். தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் அங்கு சென்று லட்சுமியை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மா்மநபா்களை தீவிர தேடி வருகின்றனா்.