காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!
சாலை விபத்தில் ஓட்டுநா் மரணம்
நாட்டறம்பள்ளி ராமகிருஷ்ணா் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் சிவக்குமாா்(34) ஓட்டுநா். இவா் சனிக்கிழமை மாலை வெலகல்நத்தத்தில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தாா்.
தேசிய நெடுஞ்சாலையில் சுண்ணாம்புக்குட்டை அருகே வந்தபோது அவ்வழியாக வந்த காா் மொபட்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிவக்குமாா் மீது எதிரே வந்த மினிலாரி மோதியதில் சிவக்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று இறந்தவா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்