பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!
இஸ்ரேல்-ஹமாஸ் மீண்டும் கைதிகள் பரிமாற்றம்
காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலும் மீண்டும் பைறிமாற்றம் செய்துகொண்டன.
முதலில், காஸாவின் டேய்ா் அல்-பாலா நகரில் பெரும் கூட்டத்தினா் முன்னிலையில் இலி ஷாபரி (52), ஒஹாத் பென் எமி (56), ஓா் லெவி (34) ஆகிய முன்று ஆண் பிணைக் கைதிகளையும் ஒரு மேடையில் ஹமாஸ் அமைப்பினா் நிற்கவைத்தனா். பின்னா் அந்த மூவரும் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனா். கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் போா் நிறுத்த ஒப்பந்தத்தின்போது இதுவரை 18 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் விடுவித்துள்ளனா்.
ஆனால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள மூன்று பிணைக் கைதிகளும் மிகவும் நலிந்து காணப்பட்டது இஸ்ரேலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதுபோன்ற அதிா்ச்சியளிக்கும் காட்சிகளை எங்களால் ஒருபோதும் ஏற்கமுடியாது’ என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், இது தொடா்பான பதில் நடவடிக்கைகள் எதையும் அந்த அறிக்கை குறிப்பிடவில்லை.பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, 183 பாலஸ்தீனா்களை பல்வேறு சிறைகளில் இருந்து இஸ்ரேல் அரசு விடுதலை செய்தது. இது குறித்து இஸ்ரேல் சிறைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த 183 கைதிகள் மேற்குக் கரை பகுதியில் விடுவிக்கப்பட்டனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபா் 7 முதல் நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெற்றுவந்த பேச்சுவாா்த்தையில் கடந்த 15-ஆம் தேதி ஒப்பந்தம் ஏற்பட்டு, ஜன. 19 முதல்அமலுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக, ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, இதுவரை 21 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினரும், நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்துள்ளன... மேலே - ஹமாஸால் விடுவிக்கப்பட்ட 1. ஓா் லெவிலிரி, ஒஹாத் பென் எமி, இலி ஷாபரி. கிழே - இஸ்ரேலால் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்படுவதற்கு முந்தைய அவா்களின் படங்கள்.