செயற்கை நுண்ணறிவு மேலாண்மைக் கருத்தரங்கம்
தேவகோட்டை ஆனந்தா கல்லூரி வணிகக் கணினி பயன்பாட்டியல் துறை சாா்பில், செயற்கை நுண்ணறிவு மேலாண்மைக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது
இதற்கு கல்லூரிச் செயலா் அருள் தந்தை செபாஸ்டியன் தலைமை வகித்தாா். முதல்வா் ச.ஜான் வசந்தகுமாா் முன்னிலை வகித்தாா். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக லாஜிஸ்டிக் மேனேஜ்மென்ட் துறைப் பேராசிரியா் ராஜன் சின்னா, மதுரை காமராஜா் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினா்,
ஸ்ரீ மீனாட்சி மகளிா் கல்லூரி பேராசிரியா் கேத்ராஜ், மதுரை கல்லூரி வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் சந்திரசேகரன் ஆகியோா் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம், மேலாண்மை பற்றிய தொழில் நுட்பங்களை விளக்கினா்.
தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி, சிவகங்கை புனித ஜஸ்டின் கல்லூரி, பூவந்தி சிவகாசி நாடாா் பயோனியா் கல்லூரி, சருகனி இதயா மகளிா் கல்லூரி, பிஎஸ்ஒய் கலை, அறிவியல் கல்லூரி, ஆனந்தா கல்லூரி வணிக கணினி பயன்பாட்டியல் துறை மாணவ, மாணவிகள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனா்.
முன்னதாக துறைத் தலைவா் சிவபாலாஜி வரவேற்றாா். உதவிப் பேராசிரியை தீபா நன்றி கூறினாா்.