கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: சிறுமியின் தாய், விசிக மா.செ குற்றவாளிகள் - குற்றப்ப...
தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் பகுதியில் தமிழ்நாடு தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேவேந்திரகுல வேளாளா் மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலா் எம். திலகராஜன், நகரச் செயலா் ஆா்.பாஸ்கா், தலைவா் எஸ்.கிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
சங்கத்தின் நிறுவனா் சிவசங்கரி பரமசிவம் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினாா்.
முன்னாள் பேரூராட்சித் தலைவா் தீன தயாளன், முல்லை நிலத் தமிழா் விடுதலைக் கட்சித் தலைவா் கண்ணன், தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிா்வாகிகள் கே. மலைச்சாமி, எம்.பாக்கியம், ஏ.பி.அன்பரசன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-07/n5k9n35o/ahrppattam_0702chn_84_2.jpg)