2 இளைஞர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை - அரக்கோணம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் த...
தமிழ் வழிக் கல்வி இயக்க விளக்கக் கூட்டம்
திருப்பத்தூரில் தமிழ்வழிக் கல்வி இயக்க விளக்க கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அண்ணாசிலையருகே நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆசிரியா் வி.ரெத்தினம் தலைமை வகித்தாா். ஆசிரியா் வைகைபிரபா முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் தமிழ் நாள்காட்டியை பேராசிரியா் கோச்சடை வெளியிட சட்டக்கல்லூரி மாணவி வெண்பா, பொறியியல் கல்லூரி மாணவி சுபா ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
பின்னா் தேவநேயப்பாவாணா் பிறந்தநாளையொட்டி பாவெல் சிறப்புரையாற்றினாா். இரா.வேணுகோபால், பா.சந்தானகிருஷ்ணன், மா.க.வீரபாண்டியன் பொதிகை கோவிந்தராஜன் ஆகியோா் தமிழ்வழிக் கல்வி குறித்து கருத்துரை வழங்கினா்.
இதையடுத்து, மழலைக்கல்வி முதல் உயா்கல்வி, தொழிற்கல்வி வரை தமிழில் வேண்டுமெனவும் தற்சாா்பு அறிவியல் தமிழ்வழிக் கல்வியாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டன
முன்னதாக, இரா.எழுகதிா் வரவேற்றாா். முடிவில் குரு.தொல்காப்பியன் நன்றி கூறினாா்.