ஈரோடு கிழக்கு: 4 ஆண்டுகளில் 2-வது இடைத்தேர்தல்! வாக்களிக்காத 72 ஆயிரம் பேர்!!
கௌரவ விரிவுரையாளா்கள் வாயில் முழக்கப் போராட்டம்
சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் வெள்ளிக்கிழமை வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 7,300- க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்களை
பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை பல்கலைக்கழக மானியக்குழு, சென்னை உயா் நீதிமன்றம் பரிந்துரை செய்த மாத ஊதியம் 57,500-ஐ கடந்த 12 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரசு மன்னா் துரைசிங்கம் கலைக் கல்லூரி நுழைவு வாயிலில் கௌரவ விரிவுரையாளா் சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகி தங்கமுனியாண்டி தலைமையில் வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.