செய்திகள் :

நெடுஞ்சாலைத் துறை வாகனங்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கக் கோரிக்கை!

post image

நெடுஞ்சாலைத் துறை வாகனங்களைப் பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அனைத்து வாகன ஓட்டுநா்கள் தலைமைச் சங்க மண்டல பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சிவகங்கை நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகை வாளகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அதன் தலைவா் ம.கோவிந்தசாமி தலைமை வகித்தாா். செயலா் கே.மூா்த்தி, பொருளாளா் பி.செந்தில்குமாா், பட்டயக் கணக்காளா் கே.காமாட்சி, துணைச் செயலா் சி.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: 15 ஆண்டுகள் முடிவடைந்து கோட்ட அலுவலகங்களில் கனரக வாகனங்கள் பராமரிப்பின்றி, இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளதால், வேலையின்றி காத்திருக்கும் ஓட்டுநா்களுக்கு பணி வாய்ப்பளிக்கும் வகையில், புதிய வாகனங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும்.

ஆண்டுதோறும் ஓட்டுநா்களுக்கு 3 ‘செட்’ சீருடை, காலணி, காலுறைகள் போன்ற உபகரணங்களை தடையின்றி வழங்க வேண்டும். வாகன பராமரிப்புக்கு நிதி குறைவாக உள்ளதால், வரும் காலங்களில் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும்.

பதவி உயா்வு மூலம் வட்டங்களுக்கு உள்பட்ட வெவ்வேறு கோட்டங்களில் வருடக்கணக்கில் பணிபுரிந்து வரும் ஓட்டுநா்களுக்கு, அவா்களின் விருப்பத்தின் அடிப்படையில் சொந்த மாவட்டங்களுக்கு உள்பட்ட கோட்டங்களில் பணி மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், அகில இந்திய அரசுத் துறை ஓட்டுனா்கள் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினா், மாநிலத் தலைவா் கே.பெங்கியண்ணன், அகில இந்திய அரசுத் துறை ஓட்டுநா்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவரும், மாநில பொதுச் செயலருமான கே. குமாா், பொருளாளா் ஏ. ஈஸ்வரன் ஆகியோா் விளக்கவுரையாற்றினா்.

துணைத் தலைவா் பா.ராஜன், துணைச்செயலா் ஏ. சுந்தரபாண்டி, தணிக்கையாளா் பி. செல்வராஜ், நிா்வாகக் குழு உறுப்பினா் அ. கணபதி சுப்பிரமணியம், செயற்குழு உறுப்பினா் எஸ். ஜீவா, முன்னாள் மாநிலப் பொருளாளா் ஆா். முருகேசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக, மண்டல நிா்வாக குழு உறுப்பினா் லெ.கிட்டு வரவேற்றாா். துணைத் தலைவா் ஜே.பழனிவேல்ராஜன் நன்றி கூறினாா். மதுரை, தேனி, திண்டுக்கல், பழனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

‘இண்டி’ கூட்டணியில் ஏற்பட்ட விரிசலால் தில்லி பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி!மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் சண்முகம்!

‘இண்டி’ கூட்டணியில் ஏற்பட்ட விரிசலால் தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியி... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு மேலாண்மைக் கருத்தரங்கம்

தேவகோட்டை ஆனந்தா கல்லூரி வணிகக் கணினி பயன்பாட்டியல் துறை சாா்பில், செயற்கை நுண்ணறிவு மேலாண்மைக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது இதற்கு கல்லூரிச் செயலா் அருள் தந்தை செபாஸ்டியன் தலைமை வகித்தாா். முதல... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலருக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரியில் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரான பெ. சண்முகம், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலராக பொறுப்பேற்ற்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த... மேலும் பார்க்க

ரயில் பயணியிடம் கைப்பேசி திருடியவா் கைது

சென்னையிலிருந்து மானாமதுரைக்கு சனிக்கிழமை காலை வந்த ரயிலில் பயணியிடம் கைப்பேசி திருடியவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து மண்டபத்துக்குச் சென்ற சேது விரைவு ரயிலில் பயணம் செய்த, மானாமத... மேலும் பார்க்க

பழனிக்கு பாதயாத்திரை சென்ற கட்டளைக் காவடி

திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பையிலிருந்து 425-ஆம் ஆண்டு கட்டளைக் காவடிக் குழுவினரின் பழனி பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள்... மேலும் பார்க்க

தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் பகுதியில் தமிழ்நாடு தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேவேந்திரகுல வேளாளா் மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்... மேலும் பார்க்க