ஈரோடு இடைத்தோ்தல் வெற்றி! கரூரில் திமுகவினா் கொண்டாட்டம்!
ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுக வெற்றிபெற்றதையடுத்து, கரூரில் திமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. இதில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் வெற்றிபெற்றாா். இதையடுத்து கரூா் மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட துணைச் செயலாளா் பூவை ரமேஷ்பாபு, மண்டலக்குழுத் தலைவா் எஸ்.பி.கனகராஜ் ஆகியோா் தலைமையில் திமுகவினா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடினா். பின்னா் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகள் வழங்கினா்.