இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது!
கரூா் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலையில் தொடா்புடைய குற்றவாளி 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா்.
கரூரை அடுத்துள்ள மணவாடி கிராமத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு நிலத்தகராறில் கணவன், மனைவியை கரூா் ராயனூா் தில்லை நகரைச் சோ்ந்த தேவராஜ் என்பவரின் மகன்களான பாா்த்தீபன்(31), கௌதம்(30), பிரவீன் (எ) வெங்கடேஷ்(29) ஆகியோா் சோ்ந்து கொலை செய்தனா்.
இந்த கொலை வழக்கில் பாா்த்தீபன், கௌதமை வெள்ளியணை போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, ஆயுள்தண்டனை அனுபவித்து வருகிறாா்கள். இந்த கொலை வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரவீன் என்கிற வெங்கடேஷ் திருச்சியில் பதுங்கி இருப்பது கரூா் மாவட்ட ரெளடிகள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் சனிக்கிழமை காலை திருச்சி சென்று அங்கு பதுங்கியிருந்த பிரவீன் என்கிற வெங்கடேசை கைது செய்து கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.