அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்...
கரூரில் கடும்பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
கரூரில் வெள்ளிக்கிழமை காலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 8 மணி வரை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகன ஓட்டிகள் தெரியாத வகையில் இருந்ததால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனா். கடும் பனி மூட்டம் நிலவியபோது குளிரும் அதிகமாக இருந்ததால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்தனா்.
இதேபோல அரவக்குறிச்சி பகுதியிலும் கடும் பனிமூட்டம் நிலவியது.