அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்...
அரவக்குறிச்சி பகுதியில் மாணவ, மாணவிகளுக்கு விநா- விடை குறிப்பு
அரவக்குறிச்சி பகுதியில் பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு விநா-விடை குறிப்புகள் அடங்கிய தொகுப்பை எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரவக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி அரசு பெண்கள் உயா்நிலைப்பள்ளி, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி, சௌந்தராபுரம் உயா்நிலைப்பள்ளி, கோவிலூா் உயா்நிலைப்பள்ளி உள்ளிட்ட 20 பள்ளிகளில் கல்வி பயிலும் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வுக்கான விநா- விடை குறிப்புகள் அடங்கிய தொகுப்பை சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ வழங்கினாா்.
நிகழ்வில், அரவக்குறிச்சி நகர பொறுப்பாளா் பி.எஸ் மணி, அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளா் எம்.எஸ்.மணியன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளா் என்.மணிகண்டன், நெடுகூா் காா்த்தி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.