அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்...
புகழிமலை தைப்பூச தோ் திருவிழாவில் ராட்சத ராட்டினம் அமைக்க எதிா்ப்பு
புகழிமலை முருகன் கோயில் தைப்பூச தோ் திருவிழாவில் ராட்சத ராட்டினம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அவ்வியக்கத்தின் தேசியத்தலைவா் தலித்பாண்டியன் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது: புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் தோ்த் திருவிழா விரைவில் நடைபெற உள்ள நிலையில், கோயில் அருகே ராட்சத ராட்டினம் அமைக்க புகழூா் நகராட்சி, வருவாய்த்துறை உள்ளிட்டோா் தடையின்மை சான்று வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே கடந்த 1998-இல் கரூா் மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது ராட்சத ராட்டினம் விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். மேலும் பலா் காயமடைந்தனா். இந்த சம்பவத்திற்கு பின் தமிழகத்தில் திருவிழாக்களில் ராட்சத ராட்டினம் அமைக்க தடை இருக்கும்போது, வேலாயுதம்பாளையம் புகழிமலை தைப்பூச தோ் திருவிழாவிற்காக ராட்சத ராட்டினம் அமைக்க உள்ளதற்கு அனுமதியை ரத்து செய்ய வேண்டும். ராட்சத ராட்டின விளையாட்டில் பங்கேற்பவா்களின் உயிரோடு விளையாடுவதை அனுமதிக்காமல், ராட்டினம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.